kathai

மைய்க்காடு மண்

விடியற் காலை .3.15.
     குருவிகளும் காக்கைகளுகம் ஏன்? ஊரே தூங்கிக் கொண்டுருக்கும் போது .நல்ல....தூக்கம் நம்முடன் பினணக்கப்பட்டு விடுபட முடியமால் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு பொழுது . ஞாபகங்கள் தேனாக மாறி நல்ல நித்திரையில் ஷ்யணித்திருக்கையில் . வேஷங்களை களைத்துவிட்டு மனித அறிவுதளம் அமைதியான பொழுதுகளை எல்லாம் மறந்து தூங்கும் பொழுது.
    குடும்பம், உறவு ,உறவின் எச்சமென்று எந்த உறவுமில்லாமல் ஆசைகளை எறிந்து உடல்சோர்வைப் போக்கும் நடுநிசி தாண்டிய வைகறையைத் தேடும் பொழுது. மின்சாரமின்றி கூட வியர்வைகள் சொட்டடித்து விழித்துக் கொள்வதில்லை என்ற நிசப்தமான பொழுதில்
       "பாங்கு" சொல்ல இன்னும் நேரமிருக்கு என்பதால் பள்ளிவாசல் ரேடியோ கூட நன்கு தூங்குகிறது.எந்தத் துன்பத்தையும் எண்ணாமல் நின்றாலும் ஜாமிய பள்ளி வாசல் தெருவில்  தென்கோடி கிழக்குப் பகுதியில் கறிகளாக மண் மாறிக் கிடக்கும் ஒரு முடுக்கு, பாதிமண் தரைக்கு மேல் கறிகளாகத் தோன்றும். பல வருடங்களாக மைக்காடுமண் கலப்படத்தால் இந்த மாற்றம் கண்டுள்ளது. சீனிகல், செங்கல், கருங்கல் சிறிதும் பெரியதுமான அந்த முடுக்கு. முடுக்கின் கதவோ கருணையோடு எப்போதும் திறந்தே கிடக்கும் . காரணம், கதவு பெயிண்டை பார்த்து பல வருடங்களாகி விட்டது. வெளரி,வெளுத்து போயிம் .கதவின் கொங்காணி கழண்டு துடிக்கும் .அசைத்தால் விழுந்துவிடும். ஆதல் அசையாது சுவற்றின் கல் துணையோடு கதவு என்ற பெயரில் சாய்ந்து நிற்கும். முடுக்குக்கு கதவு பாதுகாப்பு என்ற நிலை மாறி கதவுக்கு முடுக்கு சுவர் துணையாக நிற்கும் காலமானது
      
    முடுக்குக்குள்ளே ஓடுகளால் வேயப்பட்ட சிறிய வீடு . வீட்டிற்கு முன் காலி இடம் . அதன் எதிரே கரைந்தும் கரையாமலும் ஒழுகி நிற்கும் மண்சுவர் . வீட்டினுள்..
    ஏய்!... ஆய்ஷா  ஆய்ஷா... எந்திரி, என்று தூக்கம் களைந்த முகத்தோடு தாடி நீவி விட்டுக் கொண்டு இருந்தார் மம்மது. பாதி தூக்கத்திலும் பாதி விழிப்பும் தோன்றிதோன்றி மறைவது போல தூக்கம் களைந்து எழுந்தாள் ஆயிஷா .

    சோம்பல் மொரியாத முகத்தோடு "என்னங்க " என்று முனுமுனுத்தப்படியே சேலையை சரிசெய்து கொண்டாள் . புது போர்வையை பாதி இவள் மேலும் மீதி ஷப்ரின் மேலும் கிடந்தது
    "இந்த சின்னவன் ரசூல் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் . இங்கே பாரு கவுட்டைக்கு இடையில கைய்ய வச்சிட்டு தூங்குறான்"
     "டேய் ரசூல் ஒழுங்க படு"...
        ....,,,,.,,,,.................
      டேய்ய்... ரசூல் ..ஒழுங்க படு" 
    அதட்டலில்லாத அதட்டலோடு மம்மது உசுப்பினாலும் கண்டுக்காத ரசூலின் கைகளை மம்மதுவே எடுத்து விட்டார்
    அயர்ந்து போயி நின்ற ஆய்ஷவிடம் !ஏய் , ஆய்ஷா சிக்கத்தரை எழுப்பி விடு. அரைகுறை தூக்கத்திலிருந்த ஆய்ஷா மெத்தனமாய் நின்றாள்.
   "நேத்தே ஓண்ட என்னத்த சொன்னேன். காலையில மூனு மணிக்கே எழுப்பி விடு. பஜார் போயி மண் அரிக்கனுமினு சொன்னமில"

      மம்மதுக்கு விடியற் காலை எழுந்து போறது புதிதல்ல இது வழக்கமாக நடக்கும் விஷயம் தான் . ஆனால் இன்று சிக்கந்தரையும் துணைக்கு இழுத்திட்டு போகிறார். சனி,ஞாயிறு பிள்ளைகளுக்கு லீவு என்றாலும் தொழிலுக்கு வரும் போது ஞயிறும் சனியும் எல்லா நாட்களை போலதான் ஆகிறது
    எந்த உதாசினமில்லாமல் ஆயிஷா எழுந்து சிக்கத்தரை எழுப்பி விட, இதற்கிடையே ஓணி, ஓடம், அணைப்புகட்டை, பிரஸ் , இரும்பு சட்டி,பிளாஸ்டிக் ஜக், தூக்கிறபிரஸ்,  பனைநார்  கொண்ட சிறிய துப்புமார், பழைய சிமிண்ட் சாக்கு பை, பெரிய மம்வெட்டி.
        சிக்கந்தரு எழுந்திரு .......

       சிக்கந்தரு எழுந்திரு .......

       "ஒ  அத்தா ஒன்ன ஓணி, ஓடம் தூக்கிட்டு பஜாருக்கு கூப்பிடுறாரு போயிட்டு வா"  என்று சொன்னாதும் ..
       புரிந்துவிட்டது  சிக்கந்தருக்கு . இது வாரம்வாரம் நடக்கும் பிரச்சனை தான் . தூக்கத்தை அனுபவிக்க மனமிருந்தலும் அத்தாவின் அதட்டல் கண்முன் நிழலாடியது இன்னைக்கு இவ்வளவு தான் தூக்கம், போயிருச்சி போ! என புதுப்போர்வையை விளக்கி எழுந்திருக்கும் போது கைலி அவிழ்ந்திருந்தது எழுந்திருக்கு முன் பாயில்  உட்கார்ந்து கைலியை இழுத்தான். பக்கத்திலிருந்த ட்ரங்குப் பொட்டி முனையில் உள்ள தகரத்தில் கைலி மாட்டியிருந்ததால் கிழிந்தது . கிழிந்த சப்தம் மமம்மது காதுகளை கிழித்தது. 
      சற்று திரும்பிப் பார்த்த மம்மது " கைலியை ஒழுங்க கட்ட தெரியல நீ நா ஏண்டா கட்டுற" .
    இது புது கைலி அல்ல. பல இடங்கள் அவன் அம்மா கை தையல் போட்டு விட்டிருந்த அடையாளம் அதிகமாக இருந்தும் . மம்மதுவின் கரகரப்பான குரலில் ஏசும் போது ஓரே ஓட்டமாக ஓடி விட்டது தூக்கம்  கிழிந்து வெளியே தெரியாமலிருக்க கைலியை மாத்திக் கட்டினான் சிக்கந்தர்
    "வாயை கொப்பழிச்சிட்டு கிளம்பு வெரசா போனா தான் சிக்கிரமா வர முடியும் செரியா " சிக்கந்தரைப் பார்த்தும் பார்க்காததுமாக கூறி முடித்தார் மம்மது.
       சைக்கிளில் எல்லா சாமங்களையும் கட்டினார். கூட வண்டியைப் பிடித்துக் கொண்டான் சிக்கந்தர் 40வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் மம்வெட்டியை எங்கே வைக்க முழித்தான் . இது சாதாரண மம்வெட்டினா எடுத்து பின்னால் சிட்டில் மாட்டலாம் .  இதன் கணைமட்டும் 5அடி குறையாமலிருக்கும்.எல்லாம் எடுத்து வைக்க மணி மூனே முக்காலை தாண்டிட்டு.  பழைய பனியனை மற்றாது ஆணியில் தொங்கிய அஞ்சாறு சட்டையில் எது அழுக்கு கம்மிய இருக்கோ அதை எடுத்து மாட்டிக்கொண்டு  தலையில் குல்லாவை எடுத்து வைத்தப்படி. திரும்ப
     பள்ளிக் கூடத்து வெள்ளை சட்டைஎடுத்து மட்டிக்கொண்ட சிக்கந்தரைப் பார்த்து "நாளைக்கு பள்ளிக் கூடத்துக்கு எதை போட்டுட்டு போவ" பழைய சட்டையா இருந்தாலும் பரவயில்லை அந்த சாம்பல் நிற சட்டையை எடுத்து மாட்டிக்கோ என்றார்.
   சட்டையில் அக்குல் பகுதி கிழிந்திருக்கும். இன்னும் கிழிந்திடக் கூடாது என்று தயங்கினான். கண்டிப்பு வேறு வழியின்றி சம்பல் நிற சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.
    முடுக்கை தாண்டி சைக்கிளில்கிளம்பி போகும் வரை ஆயிஷாக்கு தூக்கமில்லை
    "நாங்க போயிட்டு வர மதியமாகிடும் வாய்க்கு ருசியா மதியம் ஏதாச்சியும் செஞ்சி வை. சிக்கந்தர்க்கு சாலமீன் ரொம்ப பிடிக்கும் செஞ்சம் வாங்கி செஞ்சி வை" என்றார் மம்மது.
    வெளித்தெருவில் நின்று கொண்டிருந்த சிக்கந்தருடன் சேர்ந்து மம்மதும் சைக்கிளை அழுத்திக் கொண்டு நிலா வெளிச்சத்தைப் பார்த்து பார்த்து நான்கு கிலோ மீட்டர் தாண்டி கூலக்கடைப் பஜார் வாய்க்காலிக்கு வந்தார்கள் . இது வாய்க்கால் தான் ஆனால் இன்று சாக்கடை கலந்து அசிங்கமாயிட்டு , ஒரு காலத்துல் இங்கு படித்தரை இருந்துதாப்பிலையும் இங்கே நிறைய பேர் குளிச்சிட்டு போனதாப்பிலையும் கூறுவார்கள். இன்று இதன் நிலை தலைகீழாக இருக்கு .எல்லா வீட்டு குப்பைகளும் தெரு சாக்கடையும்  கக்கூஸ் கழிவும் இங்குதான் கலக்குது.  பஜார் மக்கள் பாதிபேர்க்கு மேல் இங்கே தான் ஒன்னுக்கு இருக்க வருவாங்க." என பல ஒட்டு மொத்த சங்கமும் தெடர்ந்து நடக்கிறது , எந்த ஒரு நல்ல செயலும் நடக்காமல்35முதல் 50அடி வரை உள்ள அகல வாய்க்கால் ஓடைபோல் ஒல்லியாய் எளச்சி போச்சி, இந்த சாக்கடை கலந்த வாய்க்கலுக்குள்ள தான் எங்க பொழப்பு ஒண்டிக் கிடக்கு.
    துருப்பிடிச்ச இரும்பு கம்பிலான வாய்க்கால் பால பக்கம் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு "நா பஜாரை தூத்துட்டு வாரேன் நீ ஓணி அவுத்து கீழே எறக்கி ஒடம் போட்டு வை" என்றார் மம்மது
      இளங்காலை பொழுது முழுசா விடியல தெரு விளக்கு வெளிச்சம் உதவியதால் பாலத்தை விட்டு  நாலடி கீழே இறங்க 'சிக்கந்தர் கீழே பாத்து இறங்கு' என்று சொல்லி முடிக்க சிக்கந்தர் சப்பலில் சுருக்குனு ஏறுது ஒரு சரியான் நெருஞ்சி முள்
      ஆ...............என கத்தினான்
      என்னட.......
      ஒன்னுமில்லத்தா...
      பாத்து நில்லு .   என்று கூறிவிட்டு பஜாரை தூக்க கிளம்பிட்டார் .
    கழுத்திலிருந்த ஓடத்தை கீழே இறக்காமல் சப்பலையும் குத்திய முள்ளை எடுத்து வெளியே வீசிட்டு . ஓணி ஓடம்னு எல்ல சாமண்களையும் இறக்கி வைக்க. தண்ணீர் ஓடும் சப்தம் அதன் சலசலப்பு ரம்மியமாய் இருந்தது. "ஊரே சத்தமிடலனா உன் சத்தம் அழகான மொழி குலைப்பு தான்"கரண்டை கால் நனைக்க தண்ணீரை ரசித்து நின்றான்.

  போன மம்மது திரும்பி வந்து சிக்கந்தரைப் பார்த்து "இருபத்தைந்து ரூபாய் போயி தொண்டர் சந்நிதியில் புட்டும் டீயும் சாப்பிட்டுட்டு வா" என்றார்.
 சிக்கந்தர் அங்கிருந்து போனதும் மம்மது அதே இடத்தில் உட்கார்ந்து ரோட்டைத் தூக்க ஆரம்பித்தார் . இன்று தான் இவ்வள்வு தாமதம் எப்போதும் நாலு மணிக்கே வந்து தூக்க ஆர்ம்பிச்சா எப்படியும் விடியற்காலை பஜாரி தங்க வேலை பாக்கிறவங்க வருவதற்கு முன் முடிச்சிடிவார். ஆனா இன்னைக்கு அவ்வளவாக செய்ய முடியாது குத்தகைப் போட்ட பில்டிங் மட்டும் தூத்தா போதுமுனு. தூத்து பழைய சிமிண்டு சாக்கு பையில் அள்ளி வைத்தார்.
    சிக்கந்தர் ஓணி போட்ட இடத்தில் வந்து நின்றான் . புட்டும் டீயும் சப்பிட்டா நாளைக்கு பள்ளிக்கூடம் போனா ஈசாக் முன் தன்னிடம் 25 ரூபாய் காட்டிக் கொள்ளலாம் எத்தனை நாள் தான் ஈசாக்கே பந்தாவா அழையுறது. காசை பைக்குள் வைத்து கொண்டான்.
      பளபளனு விடியலும் வந்துவிட்டது .ஓணியை விட்டம் கட்ட மம்மது இடம் பார்த்து வைத்தார். சரியா விட்டமில்லை என்றால் சரக்கான தங்கமண் நிற்காது  என்பது அவருக்கு தெரியும்.
     கைலியை மேலே உசத்திக் கெட்டி மண்வெட்டியை பஜார் சாக்கடை இருக்கிற பக்கம் ஓங்கி போட்டார். தண்ணீரில் சதக்குனு போனது மெதுவா மண்ணையும் கல்லையும் அசையாமல் அள்ளினார் . ஓணியில் கொட்டினார் மூனு நாலு முறை இப்படி அள்ளி ஓணியில் போட்டார் . கரண்டை கால் ஆழமுள்ள வாய்க்காலில் சாக்கடை பக்கம் மூனடி ஆழமிருக்கு . வாரம் வாரம் எத்தனை முறை தொண்டியிருப்பார். 
    அணைப்பு கட்ட வச்சி அரிச்சார்.கொஞ்சம் கொஞ்சமாக தனது பிளாஸ்டிக் கப்பால் தண்ணீர் ஊற்றி ஊற்றி  தங்கத் தூளை அடியில் படிய வச்சிட்டுருந்தார். சிக்கந்தர் சாக்கடை கலந்த அழுக்கு மணலை அள்ளியள்ளி போட்டுக் கொண்டே நின்றான் . அடிமண்டியான மண்ணை மட்டும் இரும்பு சட்டியில் பிடிச்சி வச்சான்
    நேரமாக நேரமாக பசி வயிரை கிள்ள ஆரம்பித்தது. பசி களைப்பில் சோர்ந்ததால். மம்மதும் சிக்கந்தரும் பிரம்மராஜ் கடையில் சாப்பிட சென்றனர்.சிக்கந்தர் அஞ்சி பூரி மூனு இட்லி , மம்மது மூனு பூரி இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு  ஒரு பீடியை பற்றவைத்து ஊதினார்.
    சாப்பிட்டு வந்தவர்களுக்கு அதிர்ச்சி ஓணி மேலும் ,இரும்பு சட்டி மேலும்  காக்கைகள் நின்று ஏதோ ஆராய்ந்த்து. இரும்பு சட்டியை தட்டிவிட்டது என்றால் இன்றைக்கான உழைப்பு போச்சி. மம்மதுக்கு கோபம் ஏறிட ... "ஒன்ன நொச்சிபொதருக்குள்ள வெச்சிட்டு வர தானே சொன்னேன்"
     பசியில் சிக்கந்தருக்கு வப்பா வைக்க சொன்னது மறந்து போச்சி , நல்ல வேலை இரும்பு சட்டி அசைந்து கொடுத்தது சாயவில்லை. இன்றைக்கு அல்லா நமக்கு பரக்கத்து செஞ்சிருக்கான் என்று நினைத்து  கொண்டான் சிக்கந்தர்.
    பலத்துக்கு மேலே எத்தனையோ பேர் கடந்து போனாலும். பார்த்து போவார். கண்டு கொள்ள மாட்டார்கள். சிக்கந்தர் மனம் மட்டும் ஏனோ!சஞ்சலித்தது பாலத்துக்கு மேப்புரம் கக்கூஸ் கழிவு கலந்து வருது. வாரவாரம் இப்படி கஷ்டப்படுகிறோமே .....விடிவில்லையா?
    "மதியம் 12 மணி யாச்சி .வீட்டுக்கு போக எப்படியும் ஒரு மணி நேரமாகும் . போயி உக்காந்து சாப்பிடடு முடிந்ததும் ஒரு சின்ன தூக்கம்  போட்டு முடிச்சி வரும்போது ஊமிலோட்டுல உமிபோட்டு வைச்சி வைக்கனும்."
    மம்மதுவோ தங்கம் அரிச்ச மண்ணை பாதரசம் கொண்டு  தேய்த்து தேய்த்து கை வலிக்கும் என்ற நிலை வந்ததும் கொஞ்சம் ஓய்வுக்கு பின் தேய்த்து தங்கதூள் சேர்ப்பார் பாதரசம் தங்கம் சேர்க்க உதவியது.  கடைசி தூளையும் அரிச்சி  தங்கம் உருக்குகிற குகையில் சேர்த்து வச்சார்.
     "பொன்னோ! பூவோனு குகையை கங்குக்குள் வச்சி மெதுவா ஊத .பாதரசம் காத்துல பறக்க. மிச்ச தங்கத்த உருக்கி எடுத்து பார்த்தார் 300 அல்லது400மில்லி தேரும் போலிருந்தது"
     வியர்வை சொட்டடித்து துடைத்த மம்மது முன் ஆய்ஷா டீ கொடுத்திட்டு " நாளைக்கு போர்வைகாரன் வருவான். இரண்டு போர்வைக்கும் பணம் கொடுக்கனும் .வட்டிக் கேட்டு கந்தசாமி தேவர் வந்தரர்".
   "400 மில்லிய எத்தனை பேருக்கு பங்குபோட, பஜார்ல வேலை இருக்கும் போது விலை இல்லை, விலை 2000 இருக்கும் போது வேலை இல்லை.ஏதோ வாய்க்கும் வய்த்துக்கும் வாழ்க்கை ஓடுது இன்சா அல்லா நாளைக்கு பரக்கத்தா தருவான்"..
  
                                                            ...................


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்