மரத்தச்சனும் வனதேவதையும்
சுயவிவரக்குறிப்பு ச.இளங்கோமணி, 67ஃ2 சௌக்கத் அலித் தெரு,திருநெல்வேலி-6. செல்நம்பர்:9659940240,9944753350. பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறையில் உதவிப் போராசியராக சுயநிதிப் பிரிவில் பணி புரிகிறேன். மாணவப் பருவத்திலேயே காதல் காமம்; , ஏழைக்கவிஞன், இரண்டாம் பாகம் ஆகிய கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். என் நெறியாளர் த.கருப்பையா அவர்களுக்காக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற ஆவணப்படத்தினை இயக்கியுள்ளேன். மீசை எனும் மயிர் என்ற ஆவணப்படத்தில் முழுயுரையாடலும் செய்துள்ளேன். கனவு சிற்றிதழில் மைக்காடு மண் எனும் சிறுகதை வந்துள்ளது. நான்காவது நூல் அலங்காநல்லூரும் அடுத்தடுத்த நிகழ்வுகளும் வந்துள்ளது. தச்சு ஆசாரியைப் பற்றிய குறுநாவலே இந்த மரத்தச்சனும் வனதேவதையும். பரோட்டா ஊடுருவலும் சமூக நிலையாக்கமும். தைத் திருநாளுடன் தமிழர் வாழ்வியல், நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ச் சிறுகதையான குளத்தங்கரை அரசமரம் சொல்லும் செய்...