திருநெல்வேலி ஊரு
பல்லவி .......
திருநெல்வேலி ஊரு
வீச்சருவா திருநெல்வே பாரு
தாமிரபரணி ஆறு -தென்
பொதிகை மலை காடு
ஏலே ,....ஏலே ...எங்க ஊரு
ஏலே ,....ஏலே ...இது எங்க ஊரு
வேலி போல வயலு
ஊர சுத்தி வளர
நெல்வேலி யாச்சி -அட
திருநெல்வேலி
அணு பல்லவி
வெள்ள வேட்டி நடையும்
வெளைஞ்சி நிக்கும் பயிரும்
நெல்லையப்பர் அருளும்
ஊருக்கே தனி அழகு
அல்வா வாசம் ஊரே பேசும் ....எங்க ஊரு (திருநெல்வேலி)
அன்பா வந்தா உயிரை கொடுப்போம் .... எங்க ஊரு (திருநெல்வேலி)
தமிழை பெத்த ஊரு ஊரு ..எங்க ஊரு (தானே)
சரணம்
வாஞ்சி பொறந்தது
ஆச்ஷும் செத்ததும்
சுதந்திரம் வளர்த்தது -தனி
சரித்திரமிருக்குது
தென்காசி காத்து
குத்தால குளியலு
செங்கோட்டை பாடரு
மலைகளோடு வாழ்ந்திடும்
குத்தால குறவஞ்சி
கவிதைக்கு எடுத்துகாட்டு
மத்தாள சப்தமிடும்
ஐன்சருவி பட்டை கேளு
பாபநாசம் கரையாறு
சொரிமுத்து அய்யனாரு
களக்காடு முண்டந்துறை
மாஜ்சோலை எஸ்டேட்டு
அம்பாசமுத்திரம் பாவூர் சத்திரம்
இலச்ஷி இலத்தூர் சாயர்புரம்
நாங்குநேரி வல்லியூர்
ராதாபுரம் கிருஷ்ணாபுரம்
கூடன் குளம் கூந்தன்குலம்
ஊருக்கு ஊரு தனி சிறப்பு
ஓவ்வொரு ஊரும் தனிமவுசு
சரணம்2
ஐஞ்சி வகை நிலமும்
கொஞ்சி நிக்கும் ஊரு
கம்பா நதி எழுதிவச்ச
வண்ணநிலவன் ஊரு
ஈரடுக்கு மேம்பாலம்
பத்தமடை பாயி
ஆத்தங்கரை தர்கா
இடையன்குடி சர்ச்சி
பாளையங்கோட்டை ஊரு
ஜெயிலுக்கு தனி பேரு
ஆக்ஷ்போர்ட்da அதுமாற
பிலென்ஷ்கூல் உள்ளது (இன்னுமுள்ளது )
புலித்தேவன் கட்டபொம்மன்
புதுமைபித்தன் கயித்மில்லத்
ரா.பி. சேது பிள்ளை
ஹெஷ், ஏ. கிருஷ்ணபிள்ளை
நம்மாழ்வார் குமரகுருபரர்
டி. கே .சி .,, தி .க .சி .,, தொ .மு .சி ,,
நெல்லைகண்ணன் வண்ணதாசன்
நா. வா,, தொ.பா .
எங்க ஊருக்காரங்க
அட இவங்க எங்க ஊரு ஆளுங்க
கருத்துகள்
கருத்துரையிடுக