கிராமத்து கிரிக்கட்
கிராமத்து கிரிக்கட்
பல்லவி
களத்து மேடு ,பண்ண வீடு
வாய்க்கா வரப்பு ,கோவில் சுவரு
அத்தில் தோட்டம் ,தென்னம் தோப்பு
எங்க ஊரு கிரிக்கெட்டு -அட
எங்களோட பிளே கிரவுண்டு
செம்மண் காடு , தேரி காடு
மாடும் மேயும் ,மயிலும் மேயும்
ஆடும் மேயும் ,புளுக்க காயும்
புல்லும் சருகும் ,புழுதி மேடும்
எங்க ஊரு கிரிக்கெட்டு -அட
எங்களோட பிளே கிரவுண்டு
சரணம் 1
கோலிக்க மறந்துபோச்சி
பம்பரம் செத்துபோச்சி
சிரட்டட்ட ஓஞ்சி போச்சி
சில்லி குச்சி ஒடஞ்சி போச்சி
தெருவெல்லாம் கிரிக்கட் பின்னிகிச்சி
ஒன்னாம் வகுப்பு படிக்கிறவன் பேட்ட பத்தி கேக்கிறன்
ரெண்டாம் வகுப்பு வந்தவன் ஸ்டப செதுக்க ஓடுறன்
வெக்க விறுவிறுக்க ஆடு ஆடு
பந்த் போட ஓடு ஓடு .......
சரணம் 2
வேல்டு கப்பு கிடச்சாச்சி
டொண்டி டொண்டி வெளுத்தச்சி
ஒண்ட மட்டும் தீயா சசி
பெட் மச்சி திரிலச்சி
தெருவெல்லாம் கிரிக்கட் வந்தாச்சி
சச்சின் டோனி ஹீரோவச்சி
பட்டி காட்டு வயக்காடு கிரிக்கட் பிச்சாச்சி
வட்டு ஒட்டி சலிச்சி போச்சி கிரிக்கட் பிரண்டச்சி
பார்க்க பரபரக்க ஆடு ஆடு
வீட்ட மறந்து வளையா டு .....
கருத்துகள்
கருத்துரையிடுக