பெண்ணே
பெண்ணைப் புகழ்வது என்பது சந்தோஷமான விஷயம் .இது கவிதைக்கு கிடைத்த வரம் ..என் முன்றாம் புத்தகத்தின் உள்ள ஒரு கவிதை
பெண்ணே
ஐம்பது கிலோ எடையளவில்
சிற்பம் செய்து
காற்றில் விட்ட
கயவன் (உன்னப்பன்)
பிரம்மன் தானே
அடடா! உலக கற்பனை அழகை
ஒட்டு மொத்தமாய்ப் படைத்து
ஊருக்குள் விட்டது ஏனோ
நீ அழகோ,அவதாரமோ
புயலோ ,பூவின் வடிவமோ
எந்தனுள்ளம்
உன்னைப் படம்
பிடிக்கும் போதெல்லாம்
மூச்சித் திணறுதே
சில நிமிடங்கள்
பேச்சை இழக்குதே
உன் பொன்னான விழிகள்
குண்டு போடும் ஜெட் என்பேன்
உன் கண்ணீரை இனிக்கும்
பாதரச கற்கேண்டேன்பேன்
ஒற்றை மலை மூக்கு
அதன் பக்கவாட்டில்
இரண்டு குளமாக கண்கள்
கருப்பு எண்ணெய்
கசிந்து கிடக்கும் கார் கூந்தால்
ஒழுங்கினமான கலைந்த நேரம்
காற்றின் கரும்புகை குவிப்பு
ஒழுக்கமான பின்னால் நேரம்
நல்ல சாரைப்பாம்பு சேர்க்கை
பச்சரிசி சிரிப்பு
பலநுறு விண்மின்கள்
முட்டையிட்ட
முப்பத்தியிரண்டு பற்கள்
உன் காது
கம்மலை அடகு வைக்கும்
ஈயர் பேங்க்
அக்காள் தங்கை போல
ரோஜாப்பூ உதடு
எந்நேரமும் சிரிப்பை
உற்பத்திச் செய்து
பரஸ்பரம் நடத்தும்
உன் எச்சி தொட்டு
ஓவியம் வரையலாம்
உன் வியர்வை உருக்கி
கண்ணாடிச் செய்யலாம்
கடவுளுக்கும் காய்ச்சல் வரும்
நீ கோவிலுக்கு போனால்
இரவுக்குள் தூங்கும்
அதிசய நிலா ..
பரஸ்பரஷ் கண்கள் பளபளக்கும்
பல்லுக்குள் கிண்டல் தகதகக்கும்
கோல்கட் சிரிப்பு ஆளை மயக்கும்
குளோசப் பார்வையில் கரண்ட் இருக்கும்
நெருப்பு சூரியன் நீர் குடிக்க
நீ குளித்த ஆற்றை அனுப்பலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக